சுவையான பாலக் சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பாலக் சிக்கன் ஆத்ம திருப்தி தரும் சுவையான உணவாகும். வேகவைத்த சாதம், பஞ்சுபோன்ற சப்பாத்திகள் மற்றும் கோழிக் கறியின் சுவையுடன் ஒப்பிடுவதற்கு எதுவும் இல்லை. சில அடிப்படை வழிமுறைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே அதை எப்படி செய்வது என்று கற்றுக் கொள்வோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலக் சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ¼ kg கோழிக்கறி
  • 1 cup பாசலைக் கீரை
  • 3 சின்ன வெங்காயம்
  • 2 பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்துமல்லி
  • பிரியாணி இலை
  • பட்டை
  • கிராம்பு
  • ½ cup தயிர்
  • 3tbsp தேங்காய் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. பாலக் சிக்கன் செய்ய முதலில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும். பின் பசலைக் கீரையை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.
  2. அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, இலை போட்டு தாளிக்க வேண்டும்.
  3. பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்துமல்லி சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கியவுடன் அதில் பசலைக் கீரையைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதங்க வேண்டும்.
  4. பின்னர் அதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் மீண்டும் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைக் கொட்டவும். அதனுடன் தயிரை சேர்த்துக் கிளற வேண்டும்.
  5. எண்ணெய் தனியாக பிரிந்து வரும் போது கோழிக்கறித் துண்டையும், உப்பையும் சேர்த்துக் கிளறி சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும். கோழிக்கறி வெந்ததும் இறக்கினால் சுவையான பாலக் சிக்கன் ரெடி.