ஓரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி இப்படி செஞ்சி பாருங்க ?

Summary: உங்களுக்கு காரசாரமாகபுதியதாக ஏதாவது சட்னி வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த ஒரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி செய்வது பாருங்க. ஆம் இந்த சட்னி 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது ஏனென்றால் நாம் இந்த கார சட்னி தயார் செய்யபோது உனக்கு முழுக்க முழுக்க தண்ணீர் சேர்க்காமலேயே செய்கிறோம். ஆகையால் இந்த சட்னி கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகையால் இந்த ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத கார சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 50  ML நல்லெண்ணெய்
  • 8 வர மிளகாய்
  • 20 பல் பூண்டு
  • புளி
  • உப்பு
  • ½ tbsp கடுகு
  • ¼ tbsp உளுந்தம் பருப்பு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் 500 எம்எல் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும்.
  2. அதனுடன் நான் வைத்திருக்கும் 8 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். உங்களுக்கு காரம் அதிகமாக தேவைப்பட்டால் இன்னும் இரண்டு மூன்று சேர்த்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு நான் சேர்த்த காய்ந்த மிளகாய் எண்ணெயில் நன்றாக சிவக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு காய்ந்த மிளகாய் எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு அதன் பின்பு நாம் தோலுரித்து வைத்திருக்கும் 20 பல் பூண்டு எடுத்து அதே எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கவும். பூண்டு நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
  4. பூண்டு பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அனைத்து வைத்து இதனுடன் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கடாய் சூட்டிலேயே வதக்கிக் கொள்ளுங்கள். பின் மிளகாய் மற்றும் பூண்டு இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  5. பின் இதனுடன் தண்ணீர் சேர்க்காமல் தண்ணீருக்கு பதிலாக மீதம் இருக்கும் எண்ணெயில் சிறிது சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள். பின்பு சட்னியை ஒரு பவுளில் தனியாக எடுத்து கொள்ளவும்.
  6. பின் கடாயை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் எண்ணெயில் வரமிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளித்து அந்த தாளிப்பையும் இந்த சட்னியுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஒரு வாரம் ஆனாலும் கெடாத கார சட்னி தயாராகிவிட்டது.