நாவில் எச்சி ஊறும் சுவையான ஸ்வீட் கார்ன் கபாப் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ஸ்வீட் கார்ன் கபாப் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும். தின்பண்டங்கள் உலகளாவியவை. நீங்கள் எந்த நாடு, நகரம், வீட்டிற்குச் சென்றாலும் உங்கள் பசியைப் போக்க சிற்றுண்டிகள், தின்பண்டங்கள் இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தின்பண்டங்கள் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Ingredients:

  • 5 ஸ்வீட் கார்ன்
  • 1 cup உருளை கிழங்கு
  • ½ cup பன்னீர்
  • ½ cup வெங்காயம்
  • ¼ tsp இஞ்சி
  • 2 சிறிதுபச்சை மிளகாய்
  • 25 கொத்தமல்லி
  • 1 tsp மிளகாய் தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ¼ tsp தனியா தூள்
  • ¾ tsp சீராக தூள்
  • 2 tbsp சோள மாவு
  • 2 tbsp எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் ஸ்வீட் கார்னை வேகவைத்து மசித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, சேர்த்து கலக்க வேண்டும்.
  2. அதன் பின்னர் துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
  3. பின் நறுக்கிய வெங்காயத்தின் மீது சிறிது உப்பு தூவி சிறிதுநேரம் அப்படியே வைக்க வேண்டும்.
  4. ஸ்வீட் கார்ன் கலவையுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள், சீராக தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
  5. மசாலா சிறிது வதங்கியவுடன் உப்பு சேர்த்த வெங்காயத்தை நன்றாக பிழிந்து தண்ணீர் இல்லாமல் இந்த கலவையுடன் கலக்க வேண்டும்.
  6. நன்றாக கலந்த பிறகு இந்த கலவையை கட்லட்டுகலாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.சுவையான ஸ்வீட் கார்ன் கபாப் ரெடி.