மதிய உணவுக்கு ஏற்ற கிராமத்து காய்கறி அவியல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: சுவைநிறைந்த காய்கறி அவியல் அவியல் ஒரு சைவ சமையல் செய்முறையாகும். அவியல் ,அடை, தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றுடன் அவியல் பரிமாறப்படுகிறது. அவியல் உணவை பொறுத்தவரை வேகவைத்த காய்கறிகளின் சங்கமம் என்றே கூறலாம். ஒரு சிலருக்கு ஒரு சில காய்கறிகள் மட்டுமே பிடித்து போகும். சில காய்கறிகள் பிடிக்காமல் இருக்கும். அப்படி இருக்கும் போது வீட்டில் பிடித்த காய்கறிகள் பயன்படுத்தி சமைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Ingredients:

  • 1 வாழைக்காய்
  • 2 முருங்கைக்காய்
  • 3 கத்தரிக்காய்
  • 6 அவரைக்காய்
  • 1 மாங்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 2 cup தயிர்
  • 1 தேங்காய்
  • 10 பச்சைமிளகாய்
  • 4 தேங்காய்எண்ணெய்
  • ½ சீரகம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காய்கறிகளை நன்றாகக் கழுவி பின் தோல் நீக்க வேண்டும். அதனை நீளவாக்கில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும்.
  2. அளவாக நீர் ஊற்றி உப்பையும் போட்டுக் கலக்கி அடுப்பில் வைத்து வேகவிட வேண்டும். பின்னர் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள்.
  3. பிறகு தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், சீரகம் முதலியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. அதன் பிறகு காய்கறிகள் பாதி வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கிவிட வேண்டும். பின் காய்கறிகள் நன்கு வெந்ததும் தயிரை ஊற்றிக் கலக்கிவிடுங்கள்.
  5. பத்து நிமிடங்களுக்குப் பின் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கலக்கி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிடுங்கள். சுவையான அவியல் தயார்