காரசாரமான தூத்துக்குடி நண்டு மசாலா இப்படி செஞ்சி பாருங்க!

Summary: நண்டு மசாலா என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கை பார்த்துவிடுவார்கள், இந்த நண்டு மசாலா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக சமைக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி நண்டு மசாலா என்றால் தனி சிறப்புதான் இது மற்ற நண்டு மசாலாக்களை விட சற்று வித்தியாசமான சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்

Ingredients:

  • 1 cup துருவிய தேங்காய்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp கசகசா
  • ½ tsp சோம்பு
  • 5 முந்திரி
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp மிளகு
  • 1 Kg நண்டு
  • 2 பட்டை
  • 1 cup புளிக்கரைசல்
  • 2 பிரியாணி இலை
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp சோம்பு
  • 2 tsp மிளகாய் தூள்
  • 1½ tsp மல்லித் தூள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 tbsp நல்எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. காரைக்குடி நண்டு மசாலா வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றவும். அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  2. அதனை சிறிது நேரம் சூட்டை இறக்கிய பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  4. தாளித்தவற்றுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிய பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
  5. அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  6. பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.
  7. நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.