காரசாரமான சுவையில் பன்னீர் ப்ரைட் ரைஸ் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: ஹோட்டல்களில் செய்யக்கூடிய அளவுக்கு சுவையான உணவுகளை வீட்டிலும் செய்து சமைத்து பரிமாறலாம்.சுவையான ப்ரைட் ரைஸ் ஹோட்டல்களில் சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.ஹோட்டலின் சுவையில் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும் எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 100 gm பன்னீர்
  • 300 gm பாஸ்மதி அரிசி
  • 2 tbsp எண்ணெய்
  • ¾ tsp மிளகு தூள்
  • ½ tsp இஞ்சி பூண்டு
  • 1 குடைமிளகாய்
  • 4 பச்சை மிளகாய்
  • 15 பீன்ஸ்
  • 100 gm முட்டைக்கோஸ்
  • 2 கேரட்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய அளவு குழி கரண்டி

Steps:

  1. முதலில் பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
  2. அதில் எண்ணெய் ஊற்றி கொண்டால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. பின்னர் அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.
  3. அதன் பிறகு அரிசி முக்கால் பாதி தான் வேக வேண்டும்.பின்னர் அரிசியை வடிகட்ட வேண்டும்.ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் ஊற்ற வேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீரை பொன்னிறமாக வறுக்கவும்.
  4. பின் மேலே உள்ள காய்கறியை சிறு சிறு அளவுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மட்டும் நீளவாக்கில் கட் செய்ய வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதுகளை போட்டு வதக்க வேண்டும்.
  5. பிறகு குடைமிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு முட்டைகோஸ், கேரட், போட்டு வதக்க வேண்டும். பின்னர் பன்னீரை சேர்க்கவும்.
  6. அவை வதங்கிய பிறகு சாதத்தை போட்டு கிளற வேண்டும்.உப்பு சேர்க்க வேண்டும். பிறகு மிளகு பொடி சேர்த்து கிளற வேண்டும். சுவையான ப்ரைடு ரைஸ் தயார்.