சுவையான பானி பூரி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வட இந்தியாவில் தொடங்கி இந்தியா முழுவதும் ரோட்டோரமாக மிகவும் விமர்சையாக விற்கப்படும் பானி பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு நொறுக்கு தீனியாக மாறிவிட்டது இதனை நாம் வீட்டிலும் வாரம் ஒரு முறை அல்லது வெளியே வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே பானி பூரி செய்து மகிழ்ச்சியாக உண்டு சுவையாக வயிறு நிறைய சாப்பிடலாம். பானி பூரியில் பல வகையான உணவுகளை இணைத்து புதிய புதிய பானி பூரி உண்டு மகிழ்கின்றனர்.

Ingredients:

  • ½ cup புதினா
  • ½ cup கொத்தமல்லி தழை
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tbsp வெல்லம்
  • சிறிய நெல்லிக்காய்அளவு புளி
  • ½ tsp சீரகத்தூள்
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு
  • 2 cup மைதா
  • 2 tbsp எண்ணெய்
  • பொரிப்தற்கு தேவையான அளவு எண்ணெய்
  • ½ tsp சோடா உப்பு
  • தேவையான அளவு உப்பு
  • 2வேக வைத்தது உருளைக்கிழங்கு
  • ½ tbsp சீரகத்தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய கண் கரண்டி

Steps:

  1. முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசிட்டு பின் அதனுடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகிய மசாலாவை போட்டு சேர்ந்து கொள்ள வேண்டும்.
  2. பூரி மாவை உருட்டிய பின்னர் சிறிது நேரம் வெள்ளை ஈரத் துணியை மாவின் மேல் போட்டு மூடி வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக பூரி மாவை உருட்டி பூரி போட்டு எடுக்க வேண்டும்.
  3. புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் வெல்லத்தை சேர்க்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. பின் புதினா, கொத்தமல்லித் தழை,பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த அந்த கலவையோடு புளி நீரையும், வெல்ல நீரையும் விட்டு கலந்து கொள்ள வேண்டும்.
  5. இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில் அந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பின் அந்த புளி நீரை உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பானி பூரி ரெடி!!!