நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி உளுந்தங்களி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கருப்பட்டி உளுந்தங்களி செய்து சுவையாக உண்ணலாம். இந்த கருப்பட்டி உளுந்தங்களி மிகஎளிமையாக செய்துவிட முடியும்.இதை ஒருமுறை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி தொந்திரவு செய்வார்கள்.

Ingredients:

  • 1 cup கருப்பு உளுந்து
  • 1 tpsp பச்சரிசி
  • 3 tpsp நல்லெண்ணெய்
  • 1 tpsp நெய்
  • ½ cup கருப்பட்டி
  • ¼ cup வெல்லம்

Equipemnts:

  • 1` கடாய்
  • 1 பெரிய அளவு குழி கரண்டி

Steps:

  1. முதலில் உளுந்தை மனம் வரும் வரை வருத்துக்கொள்ளவும், அரிசியையும் வருத்து இரண்டையும் சேர்த்து நல்ல மென்மையான மாவாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
  2. அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கருப்பட்டி, வெல்லம் சேர்த்து 1 கோப்பை நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும் கொதிக்கும் சமயம் இறக்கி வடிகட்டி சிறிதுஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் வைத்துள்ள வெல்லப்பாகில் மாவை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து பின்னர் அடுப்பில் இளந்தீயில் வைத்து கிளரவும்.
  4. அதன் பிறகு இடை இடையே நல்லெண்ணெய் சேர்த்து கட்டி தட்டாமல் களி பக்குவத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவும் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயம் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  5. சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்.இந்த மாவை வருத்து, அரைத்து, சலித்து, வைத்துக்கொண்டு தேவைப்படும் சமயம் களி செய்யலாம்.