கிராமத்து மணமணக்கும் சுவையான மணத்தக்காளி குழம்பு இப்பட செஞ்சி பாருங்க!

Summary: வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மணத்தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup மணத்தக்காளிமணத்தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1/ tsp கடுகு
  • 1/ tsp வெந்தயம்
  • 2 மிளகாய் வத்தல்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் பாத்திரத்தில் நல்லெண்ணெயை விட்டு கடுகு,மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போட்டு பின்பு வெந்தயம்,கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  2. பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். மணத்தக்காளிக் காயையோ அல்லது வற்றலையோ போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  3. அதன் பின் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி தாளித்த பொருட்களோடு ஊற்ற வேண்டும்.
  4. அதனுடன் மிளகாய் பொடி, தேவைக்கான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்னர் சுவையான மணத்தக்காளி குழம்பு ரெடி.