நாவில் எச்சி ஊறும் அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 Tbsp ஏலக்காய்
  • 1 Tbsp லவங்கம்
  • 1/2 Tbsp மிளகு
  • 1/2 Tbsp இஞ்சி பொடி
  • 2 பிரியாணி இலை
  • 1/2 KG சிக்கன்
  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பிரியாணி இலை
  • 1 Tsp நெய்
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை
  • 1 லவங்கம்
  • 1 Tsp மிளகு
  • 2 Tbsp வெண்னெய்
  • 3 கப் தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 தவா
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மந்தி பொடிக்கு தேவையான பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
  4. அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
  5. பின் அதில் சிக்கன் மற்றும் மந்தி பொடியை சேர்த்துவிட்டு கால் பாகம் வைக்க வேண்டும். 3 கப் தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  6. பின்னர் அதில் உள்ள சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து இதில் அரிசியினை சேர்த்து நன்கு வேகவிட வேண்டும்.
  7. வெந்ததும் சாதத்தின் நடுவில் ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி, அதில் கறித்துண்டு ஒன்று போட்டு மூடி வைக்க வேண்டும்.
  8. அதன் பிறகு மீதி உள்ள மந்தி பொடி மற்றும் வெண்ணெயை வேக வைத்துள்ள சிக்கன் மேல் தடவி தவாவில் போட்டு பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.
  9. வேக வைத்த அரிசியுடன் சிக்கனை வைத்து சூடாக பரிமாற வேண்டும்.சுவையான அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி ரெடி.