சுவையான நிலக்கடலை குலோப் ஜாமுன் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!

Summary: தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது ஆனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்துடன் இந்த நிலக்கடலை குலோப் ஜாமூன் ரெசிபி செய்து சாப்பிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுங்கள். ஆம், இன்று சுவையான நிலக்கடலை குலோப் ஜாமுன் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் குலோப் ஜாமுன் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு.

Ingredients:

  • 1 ½ கப் நிலக்கடலை
  • 250 ML பால்
  • 1 ½ கப் மைதா
  • 15 முந்திரி பருப்பு
  • எண்ணெய்
  • 1 சிட்டிகை பேக்கிங் சோடா
  • 1 சிட்டிகை கேசரி பவுடர்
  • ¼ KG சர்க்கரை
  • 3 ஏலக்காய்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் வைத்திற்கும் நிலக்கடலைகளை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்பு வருத்த நிலக்கடலையினா தோல் பகுதிகளை நீக்கி கொள்ளவும்.
  2. அதன்பின்பு ஒரு பவுளில் பாலை ஊற்றி அதனுடன் நான் வறுத்துவைத்த நிலக்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை சேர்த்து ஒரு 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு பாலில் ஊற வைத்த நிலக்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை மட்டும் தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு பவுலில் நாம் அரைத்த நிலக்கடலை விழுதை சேர்த்து கொள்ளவும்.
  4. பின் நாம் அரைத்த விழுதுடன் மைதா மாவு, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும்வரை பிசைந்து அதன் பின் குலோப் ஜாமுனுக்கு தேவையான அளவு உருண்டையை மென்மையாக பிடித்துக் கொள்ளுங்கள்.
  5. பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் பிடித்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து குலோப் ஜாமுன் ஜீரா தயார் செய்து கொள்ளுங்கள். ஜீரா செய்யும் போது அதனுடன் ஏலக்காயும் தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  7. அதன் பின் ஜீரா செய்து முடித்தவுடன் நாம் எண்ணெயில் பொறித்த குலோப் ஜாமுன் உருண்டைகளை ஜீராவில் சேர்த்து ஊற வையுங்கள். ஜீராவில் குலோப் ஜாமுன் நன்கு ஊறியதும் சாப்பிடுவதற்கு பரிமாறிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான நிலக்கடலை குலோப் ஜாமுன் தயாராகிவிட்டது.