சுவையான டிராகன் ஃபுரூட் ஜெல்லி செய்வது எப்படி ?

Summary: குழந்தைகள் அதிகம் விரும்பி கேட்கும் பொருட்களில் ஜெல்லியும் ஒன்று. ஆனால் நாம் முடிந்த அளவிற்கு ஜெல்லியை வாங்கி கொடுக்காமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுப்போம் இருந்தாலும் குழந்தைகள் அடம் பிடிக்கும் காரணத்தினால் இதை வாங்கி கொடுத்திருப்போம். ஆனால் உங்கள் குழந்தைகள் அதிகமாக ஜெல்லியை விரும்பி சாப்பிடுகிறார்கள். என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்த டிராகன் ஃபுரூட் ஜெல்லியை உங்கள் வீட்டிலையை செய்து கொடுங்கள். ஆம் இன்று நாம் டிராகன் ஃபுரூட் வைத்து எப்படி ஜெல்லி செய்வது என்று தான் நாம் பார்க்க போகிறோம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாகவும் வேறு எந்த ரசாயன பொருட்களும் கலக்காமல் இதை செய்யலாம்.

Ingredients:

  • 1 டிராகன் ஃபுரூட்
  • 2 டம்பளர் தண்ணீர்
  • 10 கிராம் சைனீஸ் கடல் பாசி
  • 8 கிராம் சர்க்கரை

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு டிராகன் ஃபுரூட் பழத்தை எடுத்துக்கொண்டு அதன் வெளிப்புறம் இருக்கும் தோல்களை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  2. பின் நறுக்கிய துண்டுகளை ஒரு பெரிய பவுளில் சேர்த்து நன்றாக மசித்து விட்டுக் கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் மசித்து வைத்திருக்கும் டிராகன் புரூட்டை சேர்த்து கொள்ளவும்.
  3. பின் அதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி , 10 கிராம் அளவிலான சைனீஸ் கடல் பாசி மற்றும் எட்டு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து கிளறி விடுங்கள்.
  4. பின்பு டிராகன் ஃபுரூட் நன்றாக வதங்கி ஜெல்லி பதத்திற்கு கெட்டியாக வரும் வரை அடுப்பை தீயை மிதமான அளவில் எரிய விட்டு கிளறி கொண்டே இருங்கள்.
  5. பின்பு ஜெல்லி கெட்டியாக வந்தவுடன் ஒரு பவுளில் சேர்த்து பின் ஜெல்லியை ஃப்ரிட்ஜில் நன்கு குளிர வைத்து கொள்ளுங்கள். பின் ஜெல்லி கட்டியான பதத்திற்கு வந்தவுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குழந்தைகளுக்கு சாப்பிட பரிமாறுங்கள். அவ்வளவுதான் சுவையான டிராகன் ஃபுரூட் ஜெல்லி இனிதே தயார்.