தித்திக்கும் சுவையில் கருப்பட்டி மோதகம் எப்படி செஞ்சி பாருங்க!

Summary: மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக வேக வைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலாடை / சிற்றுண்டி.

Ingredients:

  • 200 கிராம் பச்சரிசி
  • 50 கிராம் துருவிய கருப்பட்டி
  • நெய்
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 Tsp ஏலக்காய் பொடி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 இட்லி அடுப்பு

Steps:

  1. பச்சரிசியை நன்றாக ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பூரணத்திற்கு துருவிய தேங்காய், கருப்பட்டி, ஏலக்காய் கலந்து தயாரித்துக் கொள்ளவும்
  2. வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் நெய், உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கிளறவும்.
  3. பின் கிளறிவிடும் போது தீயை மிதமாக ஏறிய விட்டு கையில் ஒட்டாத வண்ணம் நன்கு கிளறி விடவும்.
  4. இப்படி வதக்கிய மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கு இடுவது போல வட்டங்களாக இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடவும்.
  5. உருண்டைகளாக இட்ட கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுங்கள்.
  6. ஆரோக்கியமான மற்றும் சுவையான கருப்பட்டி மோதகம் தயாராகிவிட்டது சூடாக பரிமாறவும்.