மழைக்கு இதமா சுவையான ரைஸ் கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வழக்கமாக மழை காலங்களில் சுட சுட வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு பதிலாக இது போன்று சுவையான கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் என பல வகை உள்ளது. ஆனால் நாம் இன்று பார்க்க இருக்கிறது சுவையான ரைஸ் கட்லட். ஒரு முறை இதை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவை அற்புதமாக இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கப் வேக வைத்த சாதம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 Tbsp இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 1/4 Tbsp மிளகாய் தூள்
  • கொத்த மல்லி
  • உப்பு
  • 1/4 Tsp மஞ்சள் பொடி
  • 1/2 Tbsp சீரக பொடி
  • 1/2 tbsp தனியா தூள்
  • 1 Tbsp சோள மாவு
  • 3 Tbsp கடலை மாவு
  • 3 Tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு
  • 1 பவுள்

Steps:

  1. ரைஸ் கட்லட் செய்ய முதலில் எண்ணெய் தவிர மேலே கொடுக்கப்பட்ட அனைத்தையும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். சாதம் மையும் அளவிற்கு பிசைந்து இருக்க வேண்டும்.
  2. பின்பு வறுத்த பொரி கடலை மாவு அல்லது பேசன் மாவு உபயோகிக்கலாம் அதை ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
  3. பின்னர் நாம் ஏற்கனவே பிசைந்து வைத்த மாவை நன்கு தட்டையாக தட்டி கொள்ள வேண்டும் அதாவது கட்லட் வடிவத்தில் தட்டியிருக்க வேண்டும்.
  4. பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
  5. பின்னர் எண்ணெய் காய்ந்த உடனே உருட்டி வைத்துள்ள கட்லட்யை ஒவ்வொன்றாக கடாயில் போட்டு பொரிக்க வேண்டும். பொன்நிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
  6. பிறகு திருப்பி கொண்டே இருக்க வேண்டும் இல்லையேல் கருகி போய்விடும். நன்கு பொரிந்த பிறகு ஈரப்பதம் இல்லாத தட்டில் வைக்கவும்.
  7. பின்னர் சுவையான ரைஸ் கட்லட் ரெடி, இதற்கு சாஸ் அல்லது புதினா, காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் குளிருக்கு எத்தனை நாம் சாப்பிடுவோம் என்றே தெரியாது.