சுவையான தேங்காய் சாதம் கேரளா ஸ்டைலில் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: குழந்தைகள் அனைவருக்கும் தேங்காய் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை நேரத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வேகமாகவும், நல்ல சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் இந்த தேங்காய் சாதம். தேங்காய் சாதத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலாக செய்வார்கள். நாம் கேரளா ஸ்டைலில் தேங்காய் சாதத்தில் வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து செய்யும் போது அதன் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்கள்.

Ingredients:

  • 1 கப் அரிசி
  • 2 கப் தண்ணீர்
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 1/2 Tsp கடுகு
  • 1 Tbsp கடலை பருப்பு
  • 1/4 கப் முந்திரி
  • 1 Tbsp உளுந்த பருப்பு
  • 4 வர மிளகாய்
  • 1 Tsp பெருங்காய தூள்
  • 2 Tbsp தேங்காய் எண்ணெய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் அரிசியை நன்றாக 1/2 மணிநேரம் ஊற வைத்து சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி, சாதத்தை தட்டில் போட்டு சில நேரம் உலர வைக்கவும்.
  3. அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடாய் நன்கு காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
  4. அடுத்து துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறம் ஆகும் அளவிற்கு வதக்கி விட வேண்டும்.
  5. கலவையானது ஓரளவு பொன்னிறமாக வந்ததும், சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். சூப்பரான தேங்காய் சாதம் ரெடியாகிவிட்டது.