சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பன்னீர் பட்டாணி புலாவ்செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பன்னீர் பட்டாணி புலாவ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 5 கிராம் பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 2 பிரியாணி இலை
  • 5 கிராம் அண்ணாச்சி பூ, ஜாதிபத்தரி
  • 1 Tbsp சீரகம்
  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 400 கிராம் பன்னீர்
  • 1  கப் பச்சை பட்டாணி
  • 3 Tbsp நெய்
  • 1 Tbsp எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 3 தக்காளி
  • 2 Tbsp தயிர்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 2 Tbsp மிளகாய் தூள்
  • 1 Tbsp சீரக தூள்
  • 1 Tbsp மல்லி தூள்
  • 1 Tbsp கரம் மசாலா
  • 50 கிராம் புதினா, கொத்த மல்லி
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 2 பவுள்

Steps:

  1. ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவிய பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் தக்காளி வெங்காயம், பச்சை மிளகாய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  2. பின்னர் பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து, பன்னீரை வைத்து எல்லா பக்கங்களையும் திருப்பி விட்டு பொன் நிறமாக வறுக்கவும்.
  4. பின்பு ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாதிபத்திரி, சீரகம், பிரியாணி இலை, சேர்த்து நன்கு வதக்கவும்.மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். தயிர், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  6. இப்போது பச்சை பட்டாணி, புதினா இலை, கொத்தமல்லி இலை, வறுத்த பன்னீர், ஊறவைத்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு நீர் நன்கு கொதித்த உடன் குக்கரை மூடிவிட வேண்டும் என்று 1 விசில் வரும் வரை வேகவிடவும்.பின்பு சிறிது நேரம் கழித்து திறந்தால் சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் கிடைக்கும்.