கமகமன்னு காளான் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காளான் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காளான் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 KG சீரக சம்பா அரிசி
  • 400  கிராம் காளான்
  • 250 கிராம் வெங்காயம்
  • 200 கிராம் தக்காளி
  • 2 Tsp இஞ்சி பூண்டு விழுது
  • 5 பச்சை மிளகாய்
  • 50 கிராம் புதினா
  • 100 கிராம் புதினா
  • 2 Tsb மிளகாய் தூள்
  • 2 Tbsp கரம் மசாலா
  • 1 எலுமிச்சை பழம்
  • 100 கிராம் பூண்டு
  • 200 Ml நெய்
  • 5 முந்திரி
  • 100 Ml எண்ணெய்
  • 10 கிராம் கிராம்பு, பட்டை
  • 5 கிராம் ஏலக்காய்
  • 5 கிராம் பிரியாணி இலை
  • 100 கிராம் தயிர்
  • உப்பு

Equipemnts:

  • 1 அரிசி அலச பாத்திரம்
  • 1 குக்கர்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா அரிசியை 10 டம்ளர் நீர் சேர்த்து இரண்டு முறை நன்கு கழுவி பின்பு 5 டம்ளர் நீர் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. இந்த சமையலுக்கு தேவையான தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா வெற்றை நன்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. இதனுடன் நாம் வைத்திருக்கும் காளானையும் நன்கு சுடுநீரில் கழுவி பின்னர் இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பின்னர் குக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் முதலில் என்னை மட்டும் சிறுவனை சேர்த்து பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து,முந்திரி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
  5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து… புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, காளான், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு கிளறவும்.
  7. பின்னர் மூன்று விசில் வந்ததும் குக்கரை அனைத்து அதனுள் ஆவி வெளியேறும் வரை காத்திருந்து குக்கரை இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.
  8. அவ்வளவு தான் சூப்பரான சுவையான காளான் பிரியாணி இனிதே தயாராகிவிட்டது