காரசாரமான சிக்கன் ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்!

Summary: நமக்கு பல்வேறு வகையான ஊறுகாய் வகைகள் கண்டுள்ளோம் சாப்பிட்டுள்ளோம் அதில் நமக்குப் பிடித்த ஊறுகாய் பெரும்பாலோனர் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்று பார்த்தால் அது எலுமிச்சை ஊறுகாய் நார்த்தங்காய் ஊறுகாய் மாங்கா ஊறுகாய் ஆக தான இருக்கும். ஆனால் அசைவத்தில் சிக்கன் ஊறுகாய் என்று உள்ளது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதனால் இன்று இந்த சிக்கன் ஊறகாய் எப்படி செய்வது, தேவையான பொருள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1/2 KG சிக்கன்
  • 2 துண்டு பட்டை
  • 5 ஏலக்காய்
  • 4 கிராம்பு
  • 4 Tbsp தனியா
  • 2 Tbsp சீரகம்
  • 1 Tsp கடுகு
  • 1 Tsp வெந்தயம்
  • 1 / 4 Tsp மஞ்சள் தூள்
  • 4 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  •  1 கப் நல்லண்ணெய்
  • 1/2 கப் மிளகாய் தூள்
  • 1 பழ எலுமிச்சை சாறு
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்காமல் பட்டை, ஏலக்காய், கிராம்பு, தனியா, சீரகம், கடுகு வெந்தயம் இவற்றை பொன்னிறமாக குறைந்த அளவு தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு பின் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து கழுவிய சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.பின்பு தண்ணீர் சேர்த்து வற்றி வரும் வரை கலந்துவிடவும்.
  4. பின்பு சிக்கன்னை நல்லெண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.சிக்கன்னை பொன்னிறமாக பொரித்து எடுத்தவுடன் அதில் மிளகாய்த்தூளை சேர்ந்து கலந்து விடவும்.
  5. அதில் அரைத்து வைத்த மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும் பின்பு அடுப்பில் தீயை குறைத்து வைத்து மூன்று நிமிடங்கள் நன்கு வேக விடுங்கள்.
  6. பின்பு அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி வைத்து விட்டு. நாம் வைத்திருக்கும் எலுமிச்சைபழச்சாறு ஊற்றி நன்கு கலந்துவிடவும். அவ்வளவு தான் சிக்கன் ஊறுகாய் தயார்.