நாவில் எச்சி ஊறும் சுவையான சுவரொட்டி சமைப்பது எப்படி ?

Summary: சுவரொட்டியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இதை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்ததின் அளவும் அதிகரிக்கும். அதுபோல் பெண்கள் கர்ப்பிணி காலங்களில் இதை செய்து சாப்பிடும் பொழுது உங்களுக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சரியாகிவிடும். இன்று இந்த சுவரொட்டியை எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்ததொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • ½ KG சுவரொட்டி
  • தேங்காய் எண்ணெய்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சீரகத் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சுவரொட்டியில் ஒட்டியுள்ள கொழுப்புகளை முதலில் நீக்கி கொள்ளுங்கள். பின்பு சுவரொட்டியை தண்ணீரில் இரண்டு முறை நன்கு அலசிக் கொள்ளுங்கள்.
  2. சுவரொட்டியை வெட்டிய பிறகு கழுவ கூடாது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். சுவரொட்டியை சிறிது சிறிதாக வெட்டிக் ஓரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.
  3. பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சிறிது உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.
  4. பின்பு நாம் வெட்டி வைத்திருக்கும் சுவரொட்டியை கடாயில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு தண்ணி ஊற்றி விடாதீர்கள் சுவரொட்டி நன்கு வதங்கி வரும் பொழுது அதிலேயே தண்ணீர் வரும். அதன் பின் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  5. இப்பொழுது சுவரொட்டி நன்கு வதங்கியதும் உப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள். உப்பு தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  6. பின் கொத்தமல்லியை பொடியா நறுக்கி தூவி விட்டு ஒரு நிமிடம் கிளறி விட்டு கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரூசிகரமான சுவரொட்டி இனிதே தயாராகி விட்டது.