Summary: பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் எளிதில் செய்யக்கூடியது தான் தோசை. ஆனால் இப்படி ஆண்டு கணக்கில் ஒரே மாதிரியான வகையில் தோசை செய்து சாப்பிட்டால் உங்களுக்கும் சலித்து போகும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்து போகும். இதனால் பெரும்பாலோனர் இரவு உணவுவை ஹோட்டல்களுக்கு சென்று விதவிதமான தோசைகளை சாப்பிடுகின்றனர். நம் வீட்டிலேயே இன்று ஒரு விதமான தோசையை செய்து பார்க்க போகிறோம் ஆம், இன்று தேங்காய் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதற்கு வெள்ளை ஆப்பம் என்று வேறொரு பெயரும் இருக்கின்றது. இருந்தாலும் நாம் தேங்காய் பயன்படுத்தி இதை செய்வதால் தேங்காய் தோசை என்று சொல்லலாம். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.