சுவையான தயிர் சேமியா செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் பார்க்க இருக்கும் உணவை நீங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சலிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆம், இன்று நாம் தயிர் சேமியா பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இதனுடன் சிறு தாளிப்பு சேர்த்து மேல் மாதுளை பழங்கள் தூவி விட்டு சாப்பிட கொடுக்கும் பொழுது குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் கூட இது ஒரு பிடித்தமான ரெசிப்பியாக இருக்கும். அவர்களும் கூட உங்களை இது போல் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 7 முந்திரி பருப்பு
  • 15 உலர் திராட்சை
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 350 கிராம் புளிக்காத தயிர்
  • 150 கிராம் தயிர்
  • ½ கப் காய்ச்சிய பால்
  • 1 கொத்து கொத்தமல்லி
  • ½ பழம் மாதுளை

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீரரை நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும் நாம் வைத்திருக்கும் சேமியாவை அதில் போட்டு இரண்டு நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
  2. பின் இன்னொரு ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி சேமியாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
  3. பின் கடுகு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். அதன்பின் இதனுடன் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  4. முந்திரி பருப்பு நன்கு வறுபட்டதும் இதனுடன் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் ஒரு பெரிய பவுளில் வேக வைத்த சேமியாவை சேர்த்து அதனுடன் புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் இதனுடன் அரை கப் அளவு காய்ச்சின பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு நாம் செய்த தாளிப்பு, சிறிது கொத்தமல்லி மற்றும் மாதுளம் பழம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான தயிர் சேமியா தயாராகிவிட்டது. இதை நீங்கள் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின்பு சாப்பிட கொடுத்தால் இன்னும் அட்டகாசமான சுகையில் இருக்கும்.