சுவையான கருப்பட்டி தோசை செய்வது எப்படி ?

Summary: இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய சோள மாவு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று கருப்பட்டி தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கப் புழுங்கல் அரிசி
  • 1 கப் பச்சரிசி
  • ¼ கப் உளுந்த பருப்பு
  • 1 tsp வெந்தயம்
  • ¼ KG துருவிய கருப்பட்டி
  • ½ கப் துருவிய தேங்காய்
  • ¼ tsp ஏலக்காய் தூள்
  • ½ tsp சுக்கு பொடி
  • 1 கப் உடைத்த வேர்க்கடலை

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 கிரைண்டர் அல்லது மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் மேலே கொடுக்கபட்ட அளவில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போன்ற பொருட்களை தண்ணீர் ஊற்றி இரண்டும் மூன்று முறை நன்கு அலசிக் கொள்ளுஙகள்.
  2. பின் அலசிய பொருட்களை ஒரு பெரிய பவுளில் தனிதனியாக சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரண்டு மணி நேரங்கள் நன்றாக ஊற வைக்கவும்.
  3. பின் கிரைண்டர் அல்லது மிக்ஸி எடுத்து கொண்டு அதில் முதலில் அரிசியை அரைத்து கொண்டு பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகக் அரைத்து கொண்டு பின் இதனுடன அரிசி மாவையும் சேர்த்து அரைக்கவும்.
  4. பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு இரவு முழுவதும் நன்றாக புளிக்க வைத்து கொள்ளவும். பின் ஒரு டீ பாத்திரத்தில் துருவிய கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கருப்பட்டு கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
  5. பின் கரைத்த கருப்பட்டியை வடிகட்டி அந்தக் கரைசலை குளிர வைத்து பின் இதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் மற்றும் சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து பின் தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  6. பின் வழக்கம் போல் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, இரண்டி கரண்டி மாவை ஊற்றி விரித்து அதில் உடைத்த வேர்க்கடலையை தோசை மீது தூவி விடவும்.
  7. பின் தீயை மிதமாக ஏறிய விட்டு தோசையை இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்து கொண்டு. மீத மாவையும் இது போல் தோசை ஊற்றி எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான கருப்பட்டி தோசை தயாராகிவிட்டது.