சுட சுட சுவையான மசாலா ஆம்லெட் இப்படி ஒரு தடவை செஞ்சி பாருங்க!

Summary: அசைவம் இல்லாமல் கூட பலர் சாப்பிடுவார்கள் ஆனால் முட்டை இல்லாமல் இன்று பலர் சாப்பிடுவதில்லை. அதுவும் பெரும்பாலான நபர்களுக்கு வேக வைத்த முட்டையை சாப்பிடுவதில் சற்று தயக்கம் இருக்கும். அதனால் ஆம்லெட், ஆப்-ஆயில், கலக்கி என ஊற்றி சாப்பிடுவார்கள் ஆனால் எப்பொழுதும் வழக்கம் போல் ஒரே மாதிரியான ஆம்லெட் ஊற்றுவதற்கு பதில் இதுபோன்ற ஒரு முறை மசாலா ஆம்லெட் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 Tbsp எண்ணெய்
  • ¼ Tsp கடுகு
  • 1/2 Tsp மிளகாய் தூள்
  • 1 PInch மஞசள் தூள்
  • 1/4 Tsp கரம் மசாலா
  • 1/2 Tsp மல்லி தூள்
  • உப்பு
  • மிளகு தூள்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 கிண்ணம்

Steps:

  1. முதலில் தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். என்னை நன்கு காய்ந்ததும்.
  2. அதனுடன் கால் டீஸ்பூன் அளவு கடுகு சேர்க்கவும் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன், நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  3. அதன் பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
  4. அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.
  5. பின் எப்பொழுதும் போல் ஆம்லெட் ஊற்றுவது போல் தோசை கல்லில் ஊற்றி விடுங்கள் இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்து வரும் வரை ஆம்லெட் திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. அவ்வளவுதான் சுவையான மசாலா ஆம்லெட் தயாராகிவிட்டது. மேல் சிறிது மிளகு தூள் தூவி சுட சுட வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள் அற்புதமாக இருக்கும்.