காரசாரமான செட்டிநாடு சிக்கன் சூப் செய்வது எப்படி ?

Summary: உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சூப் குடிக்க விருப்பப்படும் பொழுது இந்த செட்டிநாடு சிக்கன் சூப் செய்து கொடுத்தால். அவர்கள் விரும்பி குடிக்கும் வகையில் காரசாரமாக அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் சூப் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் இந்த சூப் இருக்கும்.

Ingredients:

  • ½ KG சிக்கன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 1 லவங்கம்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு துண்டு பட்டை மற்றும் ஒரு லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
  2. அதன் பின் இதுனடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு மசிந்து வெந்து வரும் வரை வதக்கி கடாயை கீழே இறக்கி விடுங்கள்.
  4. பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் வதக்கிய பொருட்களை சேர்தது பின் இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. பின் மசாலா வாசனை போனவுடன் சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆறு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  6. பின்பு ஆறு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி சூப்பில் சிறிதளவு எலும்பிச்சை சாறு பிழிந்து சாப்பிட பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு சிக்கன் சூப் தயாராகி விட்டது