நாவில் எச்சி ஊறும் பாண்டிச்சேரி சிக்கன் போண்டா செய்வது எப்படி ?

Summary: மாலை நேரத்தில் டீயுடன் சுவையான சிக்கன் போண்டா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், சிக்கன் போண்டா என்றாலே பாண்டிச்சேரில் தான் ஸ்பெஷல், அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த சிக்கன் போண்டா வீட்டிலே சுலபமாக செய்து விடலாம். கீழே கொடுக்கப்பட்டிருக்க செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Ingredients:

  • ¼ கிலோ சிக்கன் கைமா
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 250 கிராம் போண்டா மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் சிக்கன் மசாலா
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • ஒரு கை பிடி அளவு தேங்காய்த் துருவல்
  • 50 கிராம் போட்டு கடலை
  • 2 சிறிய துண்டு இஞ்சி
  • கொத்த மல்லி
  • உப்பு, எண்ணெய்

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. எலும்பில்லா சிக்கனை கொத்தி (கைமா) வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
  2. பிறகு மிக்சியில் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள் தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், சேர்த்து நன்றாக அரைத்த பின் கடைசியாக சிக்கனை போட்டு அரைத்து எடுக்கவும்.
  3. அடுத்து ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய கொத்தமல்லி, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. சிக்கன் நன்றாக வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் போண்டா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
  6. பிறகு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தேய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.
  7. இப்பொழுது சுவையான சிக்கன் போண்டா தயார்.