இரண்டு மாதம் ஆனாலும் கெடாத வெங்காய தொக்கு செய்வது எப்படி ?

Summary: நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் வெங்காய தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் வெங்காயத்துக்கு செய்தால் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். இன்று வெங்காய தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ KG பெரிய வெங்காயம்
  • 40 கிராம் புளி
  • 3 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp பெருங்காயத்தூள்
  • அரைத்த தொக்கு
  • 100 ML எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp சீரகம்
  • ¼ tbsp வெந்தயம்
  • உப்பு
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் 40 கிராம் புளியை ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு அதனுடன் அரை கப் அளவு தண்ணீரை சேர்த்து புளியை 15 நிமிடங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் எடுத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தின் தோள்களை நீக்கி நீள்வாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு நாம் நீள்வாக்கில் வெட்டிய வெங்காயங்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் நம் ஊற வைத்த புளி தண்ணியும், புளியையும் சேர்த்து கொள்ளவும். இதனுடன் மூன்று டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென்று பதத்திற்கு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்க்கவும், பின் கடுகு நன்றாக பொரிந்தவுடன் கால் டீஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு நாம் அரைத்து வைத்துள்ள தொக்கையும் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் இதன் கூட சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து கொள்ளவும். பின் இதனுடன் தேவையான அளவும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. வெங்காய தொக்கு காப்பி நிலத்திற்கு வரும்வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.அதன் பின் பிறகு கடாயை கீழே இறக்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான் இரண்டு மாதம் ஆனாலும் கெடாத வெங்காய தொக்கு தயாராகிவிட்டது இனி இதை நீங்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.