காரைக்குடி ருசியான காய்கறி கிரேவி செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் மணமணக்கும் காய்கறி கிரேவி செய்து பார்க்க போகிறோம். இந்த கிரேவியை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். நீங்கள் இந்த கிரேவியை சாதம் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் புரோட்டா என எந்த ஒரு உணவு பொருளுடன் சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு தாருமாறான சுவையில் இருக்கும். இதில் மேலும் நாம் காய்கறிகள் அதிகமாக போட்டு செய்வதனால் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது. இன்ற இந்த காய்கறி கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 கப் தண்ணீர்
  • 1 tbsp உப்பு
  • 1 கேரட்
  • 1 உருளை கிழங்கு
  • 1 கப் காலிஃபிளவர்
  • ½ கப் பீன்ஸ்
  • ½ கப் பட்டாணி
  • 1 tbsp சர்க்கரை
  • 3 வர மிளகாய்
  • 1 துட்டை பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ tbsp மிளகு
  • 1 பிரியாணி இலை
  • 2 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 3 tbsp எண்ணெய்
  • 2 குடை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 tbsp சீரகம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 4 தக்காளி அரைத்த பேஸ்ட்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp கஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 tbsp மல்லித்தூள்
  • 2 tbsp முந்திரி பேஸ்ட்
  • 1 tbsp கஸ்தூரி மேட்டி
  • கொத்த மல்லி சிறிது

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து பின் நீள்வாக்கில் நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, காலிரபிளவர், பீன்ஸ், பட்டாணி மற்றும் கடைசியாக சர்க்கரை சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல், வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை, மல்லி மற்றும் சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும் பின் வறுத்தெடுத்த பொருட்கள் குளிர்ந்த பின் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் குடைமிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளவும் இதனுடன் வேகவைத்த காய்கறிகளையும் சேர்த்து நாம் வறுத்த அரைத்த பொடியை சிறிது தூவி நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. அதன் பின்பு நாம் வதக்கிய காய்கறிகளை தனியாக ஒரு பவுளில் தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே கடையில் வெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  5. அதன்பின் இதனுடன் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளரி விட்டு மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லித்தூள் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்தாக நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு இதனுடன் முந்திரி பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் வேக வைத்த காய்கறி தண்ணியும் சிறிது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  6. பின்பு இதனுடன் நாம் வதக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து. நம் வறுத்து அரைத்த பொருள்களை சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடைசியில் வைத்திருக்கும் கஸ்தூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான காய்கறி கிரேவி தயாராகிவிட்டது.