நாவை சுண்டி இழுக்கும் கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?

Summary: கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும் அது மட்டுமில்லாமல் நம் உடம்பில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிப்பதன் மூலம் நம் உடலில் வீக்கம் ஏற்பட்ட பகுதிகள், காயம் அடைந்து சரும திசுக்கள் மீண்டும் உருவாக இப்படி பல நன்மைகள் கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் நாம் உடலுக்கு கிடைக்கிறது. கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த கோவைக்காய் சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Ingredients:

  • எண்ணெய்
  • ¼ KG கோவைக்காய்
  • ¼ கப் புளி தண்ணீர்
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • ¼ tbsp உளுந்த பருப்பு
  • ¼ சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 2 மிளகாய் வத்தல்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் கோவைக்காயை சுத்தமான தண்ணீர் வைத்து நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்பு கோவைக்காயை பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின் நறுக்கிய கோவைக்காயை இட்லி அவிப்பது போல் இட்லி சட்டியின் மேல் பகுதியில் கோவக்காயை போட்டு நன்றாக அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அவித்த கோவைக்காய் தனியாக ஒரு பவுளில் எடுத்து சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.
  3. பின் கோவக்காய் சூடு ஆரியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு புளி கரைத்த தண்ணீர் சேர்த்து திருதிருவன அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  4. எண்ணெய் நன்கு சூடேறியவுடன் நம் தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதையும் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கோவைக்காயுடன் சேர்த்து கொள்ளவும்.
  5. பின் கோவைக்காயுடன் சேர்த்து போட்டு இப்பொழுது மையாக அரைத்து கொள்ளவும். அரைத்த சட்னி தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளவும்.
  6. பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, மிளகாய் வத்தல் போட்டு தாளிக்கவும் பின் அரைத்து வைத்திருக்கும் கோவைக்காய் சட்னியை இதனுடன் சேர்த்து கிளறி விடுங்கள்.
  7. அதற்கு பின் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் சட்னி இனிதே தயார் ஆகிவிட்டது.