Summary: ருசியான தேங்காய் பால் சாதம் ஒரு முறை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.பிரியாணி சுவையில் இருக்கும் இந்த தேங்காய் சாதத்துடன், தயிர் பச்சடி, அல்லது சிக்கன் கிரேவி போன்று செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.விடுமுறை நாட்களில் மட்டும் தான் அசைவம் செய்து சாப்பிடுகிறோம். அந்த வகையில் வார நாட்களில் ஒரு நாள் இந்த தேங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.