குழிப்பணியாரம் இனி இப்படி செய்து பாருங்க!

Summary: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடாக்குடிய உணவுகளில் குழிப்பணியாரம் ஓன்று தான். ஆனால் வீட்டில் அதை செய்வதற்கு பெண்கள் சலித்துக்கொள்வார்கள். அதனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் அந்தளவு ருசியாகவும் இருக்காது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் ருசியாக செய்து விடலாம்.இந்த முறையில் குழிப்பணியாரம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனென்றால் பச்சை பயிர் வைத்து தான் இந்த குழிப்பணியாரம் செய்யப்போகிறோம்.இனி இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்க சீக்கிரம் காலியாகிவிடும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

Ingredients:

  • 1 கப் பச்சை பயிறு
  • ½ கப் உளுத்தப்பருப்பு
  • ¼ கப் இட்லி அரிசி
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • 1 டீஸ்பூன் இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • கொத்தமல்லி இலை
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

Steps:

  1. முதலில் பச்சைப்பயிர், உளுத்தம் பருப்பு, இட்லி அரிசி, வெந்தயம், இவற்றை அனைத்தும் குறைந்ததும் 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. 5 மணி நேரம் ஊறியதும் அதனை கிரைண்டர், அல்லது மிக்சியில் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அரைத்தும் மாவை புளிக்க வைக்கவேண்டும். அதற்கு ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குறைந்தது 5 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.
  4. மாவு புளித்ததும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, சேர்த்து பொரிந்து சிவந்து வந்ததும் பெருங்காய பொடி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் வெந்தால் போதும் அதுவரை வதக்கவும்.
  5. பிறகு இதனை ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் மாவில் சேர்த்து கூடவே கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  6. பிறகு அடுப்பில் பணியார கல் வைத்து சூடானதும் எண்ணெய் அல்லது நெய் விட்டு மாவை குளிக்கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
  7. பின்பு பொன்னிறமாக வெந்ததும் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
  8. இப்பொழுது ருசியான குழிப்பணியாரம் தயார்.