இட்லி பொடி இந்த மாறி செஞ்சி பாருங்க!

Summary: இனிமேல் இட்லி பொடி கடைகளில் வாங்கி சாப்பிடாதிங்க வீட்டிலேயே சுலபமாக 10 நிமிடத்தில் சூப்பரான இட்லி பொடி செய்து விடலாம். இந்த இட்லி பொடி புது விதமான டேஸ்டில் இருக்கும் இதை அரைத்து வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அருப்புதமாக இருக்கும். இதை எப்படி செய்வேதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 துண்டு இஞ்சி
  • 5 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • வர மிளகாய்
  • 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • எண்ணெய்
  • உப்பு
  • புளி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி,பூண்டு, சின்ன வெங்காயம் நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு இதை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க வேண்டும். நன்றாக பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  3. அடுத்து இதில் புளி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஏற்கனவே சின்ன வெங்காயம் கலவையில் இதை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும்.
  4. இந்த பொடி 15 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.