உடல் எடையை வெகுவாக குறைக்கும் பார்லி கஞ்சி சூப் !

Summary: உடல் எடையை குறைப்பதற்கு பார்லி கஞ்சி ஒரு சிறந்த வழியாக இருக்கும். நாம் பார்லி கஞ்சி சாப்பிடுவதால் அதில் இருக்கும் வைட்டமின் சத்துக்களும் நீரில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதை தினசரி நம் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் கொழுப்பு சத்துக்கள் நம் உடலோடு படிந்து விடாமல் பாதுகாக்கும். மேலும் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த பார்லி கஞ்சி இப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 2 கப் பார்லி
  • 1 கப் கம்பு
  • 6 சின்ன வெங்காயம்.
  • 1 உருளை கிழங்கு
  • 1 தக்காளி
  • 1 கேரட்
  • 1 கொத்து செலரிக் கீரை
  • முட்டை கோஸ்
  • 1 சிட்டிகை துளசி
  • 1 சிட்டிகை ஓமம்
  • மிளகுத்தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் நம் எடுத்து கொண்ட கம்பையும் பார்லியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு ஒரு வெங்காயத்தை மூன்றாக வெட்டி மீதமுள்ள சின்ன வெங்காயங்களையும் வெட்டி கொள்ளுங்கள்.
  2. பின்பு செலரிக் கீரை இலையை எடுத்து கொண்டு பின்பு பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் உருளை கிழங்கு, கேரட், முட்டை கோஸ் இந்த மூன்று காய்கறிகளையும் நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  3. தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு மை போன்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் அரைத்து வைத்த தக்காளி, கீரை, வெங்காயம் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் பின்னர் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் பார்லியையும், கம்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு நன்றாக ஒரு முறை கலக்கி விட்டு மூடி விடவும்.
  5. கஞ்சி பாதி வெந்தவுடன் தேவையான அளவு உப்பு, துளசி, மிளகுத்தூள், ஓமம் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட்டு விட்டு மறுபடியும் பாத்திரத்தை மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு பார்லி வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் பார்லி கஞ்சி இனிதே தயாராகிவிட்டது.