தயிர் சாதம் இனி இப்படி செய்து பாருங்க யாரும் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க!

Summary: சிலர் தயிர் சாதம் என்றாலே எனக்கு வேண்டாம் என்று சொல்லுவார்கள் குறிப்பாக குழந்தைகள். அவர்களுக்காகவே இந்த முறையில் தயிர் சாதம் செய்து கொடுத்து பாருங்க அவர்களும் வேண்டான்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இந்த தயிர் சாதத்துடன் ஊறுகாய், அல்லது உருளை கிழங்கு பொரியல் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.இந்த ரெசிபி செய்வதும் மிகவும் சுலமபம் தான் குறைவான நேரத்தில் சட்டுனு செய்து விடலாம்.இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் சாதம்
  • 2 கப் தயிர்
  • 1 பீட்ரூட்
  • 3 பச்சை மிளகாய்
  • ½ கப் கொத்தமல்லி
  • மாதுளை
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் இஞ்சி
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • பெருங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் பால்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சாதத்தை எடுத்து, அதில் தயிர், பால், பீட்ரூட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சேர்த்து கலந்து விடவும்.
  2. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, ஆகிய வற்றை சேர்த்து தாளித்து சாதத்தில் கொட்டி கிளறவும்.
  3. பிறகு அதன் மேல் மாதுளை தூவி விடவும். இப்பொழுது ருசியான தயிர் சாதம் தயார்.