ரவா தோசை மொறு மொறு இதை சேத்து செஞ்சி பாருங்க!

Summary: குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ரவா தோசை எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்க போகிறோம். ரவா தோசையுடன் சொரைக்காய் அரைத்து சேர்த்து சுட்டால் அவ்வளவு சுவையாகவும். உடலுக்கு மிகவும் நல்லது. சுரைக்காய் என்றாலே பிடிக்காதவர்களுக்கு இது போன்று சுரைக்காய் ரவா தோசை செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.சுரைக்காய் மிகவும் நீர்ம சத்து உள்ள காய் அதை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமானது.இந்த ரவா தோசை எப்படி செய்யலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 200 கிராம் சொரைக்காய்
  • 1¾ கப் அரிசி மாவு
  • ¾ கப் ரவை
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  • உப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் பெருங்காயம்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இழை

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் சுரைக்காவை தோல் நீக்கி விதைகளையும் நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு மிக்சி ஜாரில் சுரைக்காவை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு பௌலில் அரைத்த சுரைக்காய் விழுது சேர்த்து அதனுடன் அரிசி மாவு, ரவை, கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, சீரகம், பெருங்காயப்பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்கு மாவை கலப்பது போல் கலந்துகொள்ளவும்.
  4. கலந்த பிறகு மாவை 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  5. 15 நிமிடம் கழித்து மாவு இறுகளாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கலந்து கொத்தமல்லி இழைகளை சேர்த்து கலந்துகொள்ளவும்.
  6. அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்கு சூடானதும், மாவை எடுத்து ஊற்றி அதிகமான தீயில் வைத்து மொறுகளாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  7. இப்பொழுது சுவையான ரவா தோசை தயார்.