காலிப்ளவர் 65 இனி இப்படி செய்து பாருங்க!

Summary: குழந்தைகளுக்கு காலிபிளவர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்யும் போது மசாலா ஒட்டாமல் தனியாக வந்துவிடும். இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் அதே சுவையில் மசாலா விழாமல் எப்படி செய்வதென்ருதான் பார்க்க போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

Ingredients:

  • காலிபிளவர்
  • மஞ்சள் தூள்
  • 1 கப் மைதா மாவு
  • ½ கப் சோளமாவு
  • 1 டேபிள் ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காலிபிளவரை நறுக்கி சுடுதண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து காலிபிளவரை சேர்த்து 1 நிமிடம் கழித்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு மிக்சியில் மைதா மாவு, சோளமாவு, காஸ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு சுத்தம் செய்த காலிபிளவரை ஒரு பௌலில் சேர்த்து அரைத்த மசாலாவை 7 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பிசைந்து வைக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்து கொள்ளவும். அதனை 10 நிமிடம் ஊறவிடவும்.
  4. 10 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.
  5. ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காலிபிளவரை போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. இப்பொழுது சுவையான கோபி 65 தயார்.