சுவையான புதினா சாதம் செய்வது எப்படி.

Summary: புதினா சத்தத்தை பத்து நிமிடத்தில் சுலபமாகவும் சுவையாகவும் சமைத்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் .இந்த சாதத்தை மதிய உணவாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் குடுக்கலாம்.

Ingredients:

  • 2 கப் அரிசி
  • 1 கப் புதினா
  • புளி
  • 2 பச்சைமிளகாய்
  • இஞ்சி
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள்ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 காஞ்ச மிளகாய்
  • 15to20 கப் முந்திரி பருப்பு
  • உப்பு

Equipemnts:

  • கடாய்1

Steps:

  1. முதலில் இரண்டு கப் அரிசியை வேகவைக்கவும்.
  2. ஒரு மிக்சியில் ஒரு கப் புதினா அதனுடன் சிறிதளவு புளி, இரண்டு துண்டு இஞ்சி, மற்றும் இரண்டு காஞ்ச மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
  3. பிறகு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் சேர்க்கவும் எண்ணைய் சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அதனுடன் இரண்டு காஞ்ச மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  4. பிறகு அதனுடன் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  5. பின்பு அதனுடன் அரைத்த புதினா விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும்.
  6. இரண்டு நிமிடம் வேகவைத்த பிறகு அதனுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.
  7. இப்பொழுது சுவையான புதினா சாதம் தயார்.