ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Summary: நம்ம ஊர் சிக்கன் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ஒரு மாறுதலாக இருக்கும், சிக்கன் கிரேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல், அதைத்தான் நாம் இங்கு காண இருக்கிறோம். நம்ப ஊர் சிக்கன் வறுவலுக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவலுக்கும் வட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். இந்த சிக்கன் வறுவலை எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுத்துளோம் இந்த வாரம் கடைசில் இந்த ஆந்திரா ஸ்டைலில் சிக்கனை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ கிலோ சிக்கன்
  • 2 பெரியவெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • ½ டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  2. பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி தனி தனியாக மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் சிக்கனை போட்டு நன்கு வதக்கவும்.
  4. அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்கு கிளறவும்.
  5. பச்சை வாசனை போனதும், அதில் அரைத்த தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. சிக்கன் அரைவேக்காடு வெந்தவுடன் அதில் மல்லி தூளை சேர்க்கவும். பிறகு கொதித்தவுடன் அதில் அரைத்த வெங்காயம் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு மசாலா வற்றும் வரை மூடி வைத்து நன்கு கொதிக்கவிடவும்.
  7. சிக்கன் நன்கு வெந்ததும் கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஆந்திர ஸ்பைசி சிக்கன் தயார்.
  8. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும்.