கமகமக்கும் சுவையான ஆலு முட்டைக்கறி செய்வது எப்படி ?

Summary: முட்டையில் செய்த உணவுகள் என்றாலே அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஆலு முட்டைக்கறியை ஒரு நாள் சமைத்து பாருங்கள்,அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த ஆலு முட்டைக்கறியை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இது போன்று ஒரு முறை செய்து பாருங்கள்.

Ingredients:

  • 1 உருளைக்கிழங்கு
  • 3 முட்டை
  • 2 பச்சைமிளகாய்
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • கருவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணைய்
  • 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி கலவை தூள்
  • ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகு பொடி
  • கொத்தமல்லி
  • ½ டேபிள் ஸ்பூன் கடுகு
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 பவுள்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை இடித்து வைத்துக் கொள்ளவும். கடைசியாக சிறிது கருவேப்பிலை சேர்த்து இடித்து கொள்ளவும்.
  2. பின்பு உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து பின் தோல்களை நீக்கி பின்பு நன்கு மசித்துக் கொள்ளவும்.
  3. அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் முட்டையை சேர்த்து அரை பதமாக வேகவைத்து முட்டையின் ஓடுகளை நீக்கி வைக்கவும்.
  4. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும், பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. பாதி வதங்கியதும் இடித்து வைத்த சின்ன வெங்காயக் கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் தூள் வகைகளை சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்றாக கொதிக்கவிடவும்.
  7. பிறகு கரண்டியால் முட்டையை ஒன்றிரண்டாக பொடித்து விட்டு அதில் சேர்க்கவும் மற்றும் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும்.
  8. அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கடைசியாக மிளகுப் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி விடவும்.
  9. இபொழுது சுவையான ஆலு முட்டைக்கறி இனிதே தயாராகிவிட்டது.
  10. சப்பாத்திக்கு சூப்பர்ரான ஜோடி இது.