10 நிமிடத்தில் மொறு மொறு ரவை போண்டா இப்படி செய்து பாருங்க.

Summary: குழந்தைகள் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா அப்போ இந்த ரவை போண்டா செய்து கொடுத்து பாருங்க மீண்டும் எப்போ செய்விக்கனு கேட்பாங்க ஏனென்றால் இந்த போண்டா மொறு மொறுனு சுவையாக இருக்கும்.குழந்தைகளுக்கு மொறு மொறுனு இருந்தாலே நல்ல சாப்பிடுவாங்க, அவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் அப்படித்தான். அப்போ இந்தமாரி செய்து கொடுங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரவை போண்டா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் ரவை
  • 1 கப் மோர்
  • 2 உருளை கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ரவையில் மோர் சேர்த்து கொஞ்சம் நேரம் ஊறவைக்கவேண்டும்.
  2. பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இழை, கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு, சேர்த்து கலந்து விடவும்.
  3. பிறகு ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. இப்பொழுது சுவையான மொறு மொறு ரவை போண்டா தயார்.