Summary: தக்காளி சட்னி அனைவரும் விறுவிறும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஆகும். இது தோசை,இட்லி, போன்ற காலை மற்றும் இரவு உணவுகளுக்கு மிக பொருத்தமானதாகும்.
Ingredients:
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
2 தக்காளி
4 சின்ன வெங்காயம்.
6 பல் பூண்டு
2 சிவப்பு மிளகாய்
உப்பு
2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
¼ டேபிள் ஸ்பூன் கடுகு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 சிவப்புமிளகாய்
பெருங்காய பொடி
கருவேப்பிலை
Steps:
முதலில் ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கிய சின்னவெங்காயம், 6 பல் பூண்டு, 2 நறுக்கிய தக்காளி, 2 சிவப்பு மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்ச நேரம் வேகவிடவும்.
தக்காளி ஜூஸ் முழுவதுமாக போகும்வரை வேகவிடவும். வெந்தபிறகு சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஆறவிடவும்.
பின்பு அதை ஒரு மிக்சியில் மிருதுவாகும் வரை அரைக்கவும்.
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் ¼ டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 சிவப்பு மிளகாய், சிறிதளவு பெருங்காயப்பொடி,மற்றும் கருவேப்பிலை இலை சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்.
பின்பு தாளித்ததில் முதலில் அரைத்த தக்காளி சட்னியை சேர்த்து கலந்து விடவும்.