5 நிமிடத்தில் ருசியான மாங்காய் சட்னி இனி இப்படி செய்து பாருங்க!

Summary: இட்லி, தோசை என்றாலே அதற்கு சட்னி தான் சூப்பராக இருக்கும். அந்த சட்னியில் பல வகை உண்டு தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி என்று உள்ளது. அந்த வகையில் வித்தியாசமான முறையில் மாங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க சட்னி பிடிக்காது என்று சொன்னவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள்.

Ingredients:

  • 1 மாங்காய்
  • ½ கப் தேங்காய் துருவல்
  • 8 மிளகாய் வற்றல்
  • பெருங்காயப்பொடி
  • உப்பு
  • ½ ஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மாங்காய் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  2. பிறகு மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய், பெருங்காயப்பொடி, மற்றும் தேவையான அளவு உப்பு, சேர்த்து தண்ணீர் சேர்த்தாமல் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
  4. சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.