பஞ்சு போன்ற மென்மையான தட்டு இட்லி செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் தட்டு இட்லி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் போல் இட்லி செய்து கொடுக்காமல் இது போன்ற ஒரு முறை இந்த தட்டு இட்லி செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த இட்லியின் சுவையாகவும் இருக்கும் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 500 கிராம் இட்லி அரிசி
  • 100 கிராம் உருட்டு உளுந்து
  • 1 tbsp வெந்தயம்
  • 50 கிராம் அவல்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் இட்லி அரிசி, உருட்டு உளுந்து மற்றும் வெந்தயம் போன்ற பொருட்களை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் மீண்டும் அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் சிறிய பவுளில் தேவையான அளவு அவல் எடுத்துக் கொண்டு நீங்கள் மாவு அரைப்பதற்கு பத்து நிமிடம் முன்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு நாம் மிக்ஸி ஜாரில் அரைக்க நாம் ஊறவைத்த பொருள்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின் அரைத்த மாவை ஒரு இரவு முழுவதும் புளிக்க வைத்து விட்டு. பின் காலையில் இட்லி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும். ஒரு இரண்டு சிறிய அளவு தட்டு எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் தடவி இட்லி மாவை தட்டில் ஊற்றி கொள்ளவும்.
  5. பின் இட்லி தட்டை எடுத்து பாத்திரத்தில் வைத்து அதற்கு மேல் இட்லி ஊற்றிய தட்டை வைத்து ஒரு 15 நிமிடங்கள் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக மீதம் உள்ள இட்லி மாவையும் ஊற்றி தட்டு இட்லி தயார் செய்து கொள்ளுங்கள்.