மதுரை ஹோட்டல் சுவையில் மட்டன் சால்னா இப்படி செய்து பாருங்க!

Summary: உங்களுக்கு மதுரை ஸ்டைல் உணவுகள் பிடிக்குமா? அதுவும் மதுரை ஹோட்டல்களில் பரோட்டாவுக்கு கொடுக்கப்படும் சால்னா என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மட்டன் சால்னாவை உங்கள் வீட்டிலேயே அதே சுவையில், சுலபமாகவும், செய்வது எப்படி என்றுதான் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் மட்டன் எலும்பு
  • ½ கப் துவரம் பருப்பு
  • ½ கப் கடலைப்பருப்பு
  • ¼ கப் நறுக்கிய வெங்காயம்
  • ½ கப் தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 கத்திரிக்காய்
  • கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் மட்டன் எலும்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன், எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து 4 விசில் வேகவைக்கவும்.
  2. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. வதாகியதும், அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து பச்சை வாசனை போனதும் கத்திரிக்காய் சேர்த்து வேகவைக்கவும்.
  4. பின்னர் வேகவைத்த பருப்பு, மட்டன் கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.