ருசியான கிழங்கான் மீன் குழம்பு செய்வது எப்படி!

Summary: ருசியான கிழங்கான் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே தனி பிரியம் உண்டு. நிறைய வகை மீன்குழம்புகளை நாம் வீட்டில் செய்து ருசித்திருப்போம், ஆனால் கிழங்கான் மீன் குழம்பு செய்து ருசித்திருக்கிகளா. மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் பெயருக்கு ஏற்றமாரி மீனும் கிழங்கு போலத்தான் இருக்கும், குறைந்த அளவே முள்ளு தான் இருக்கும். குழந்தைகளுக்கும், மீன் சாப்பிட தெரியாதவர்களுக்கும் இந்த மீனில் குழம்போ, அல்லது வருவாளோ செய்து தரலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • ½ கிலோ கிழங்கான் மீன்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு சுக்கு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1½ டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • புளி
  • 1 பூண்டு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். புளியை நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து சுக்கு, மிளகு, சீரகம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு அரைத்ததை புளிக்கரைசலில் கரைத்து தேவையான அளவு உப்பு, போட்டு கலக்க வேண்டும்.
  4. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வதங்கியதும் கரைத்து வைத்த மசாலா புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மீன் துண்டுகளை போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி இழைகளை தூவி இறக்கவும்.
  6. இப்பொழுது சுவையான கிழங்கான் மீன் குழம்பு தயார்.