தேவாமிர்தம் போல் லட்டு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

Summary: பண்டிகைகள் என்று எடுத்துக் கொண்டால் தீபாவளி, தைப்பொங்கல் மற்றும் அவரவர் ஊர்களில் திருவிழாவாக நடைபெறும் ஊர் பொங்கல் முதற் கொண்டு அனைத்து பண்டிகையையும் லட்டு இடம்பெற்றிருக்கும். பல வகையான லட்டுக்கள் செய்யப்படும் இதை வேண்டாம் என வெறுத்து ஒதுக்குபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவ்வளவு மகத்துவம் வாய்ந்த லட்டினை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஆக எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • எண்ணெய்
  • 200 கிராம் கடலை மாவு
  • 350 கிராம் சர்க்கரை
  • கேசரி பொடி
  • 4 tbsp நெய்
  • 15 முந்திரி
  • 20 உலர் திராட்சை
  • 2 tbsp பால்
  • 8 லவங்கம்
  • 15 டைமண்ட் கல்கண்டு
  • 5 ஏலக்காய்
  • 1 சிட்டிகை பச்சை கற்பூரம்

Equipemnts:

  • 2 கடாய்
  • 2 பவுள்
  • 1 பெரிய கண் கரண்டி

Steps:

  1. முதலில் பாகு தயாரிக்க கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை அதில் சேர்த்து 50 ml நீர் விட்டு சூடாக்கிக் கிளரி விட்டு கொள்ளவும் பின்பு சர்க்கரை கலந்த நீர் கொதிக்கும் பொழுது அதனுடன் பாலை கலந்து கொள்ளவும்.
  2. அதன்பின்பு இதனுடன் கேசரி கலர் பொடியையும் பாகுடன் சேர்த்து நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும்.பின்பு கடலை மாவை எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜிக்கு மாவு தயார் செய்வது போல் கெட்டியாக தயார் செய்து கொள்ளுங்கள்.
  3. பின்பு பூந்தி தயார் செய்ய ஆரம்பிக்கலாம் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். பின்பு எண்ணெய் சூடேறும் வரை காத்திருங்கள்.
  4. எண்ணெய் சூடு ஏறியவுடன் கண் கரண்டியை கடாயின் மேல் வைத்து அதன் மேல் கடலை மாவை ஊற்றி பூந்தியாக எண்ணெயில் விழும்படி நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள் இவ்வாறாக சிறிது சிறிதாக கண் கரண்டியில் ஊற்றி பூந்தி பொரித்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு பொரித்து எடுத்த பூந்தியை நாம் தயார் செய்து வைத்துள்ள பாகுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி இதனுடன் முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு வறுந்து எடுத்த பொருட்கள், ஏலக்காய், கற்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  7. பின்பு இதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து மறுபடியும் கலந்து அதன் பின்பு லட்டு போல் தேவையான அளவு உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் தேவாமிர்தம் போல் ருசியாக இருக்கும் லட்டு இனிதே தயாராகி விட்டது.