கார சட்னி எப்படி செய்வது !

Summary: எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று கார சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் கார சட்னி எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பூண்டு
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சின்ன வெங்காயம், அல்லது பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சைவாசனை போகும் வரை 10-15 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
  4. இப்பொழுது சுவையான கார சட்னி தயார்.