சுட்டக் கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி!

Summary: சுட்ட கத்திரிக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைந்து சூப்பரான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த கத்திரிக்காவை வைத்து இது போன்று சட்னி செய்து பாருங்க இட்லி, தோசைக்கு மட்டும் அல்லாமல் சுட சுட சாதத்துடணும் சேர்த்து சாப்பிடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும்.ஆரோக்கியமான சுட்ட கத்திரிக்காய் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 250 கிராம் கத்திரிக்காய்
  • மல்லித்தழை
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 100 கிராம் தேங்காய் தூள்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 5 பல் பூண்டு
  • கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கத்திரிக்காவின் காம்புகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து சின்ன வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் நறுக்கிக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கதிரிகாவை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், தக்காளி, சீரகம் சேர்த்து வதக்கவும்.
  4. பின் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  5. பிறகு கொஞ்சம் மசித்துக்கொள்ளவும். இப்பொழுது சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெடி.