ஆட்டு மூளை வறுவல் செய்வது எப்படி!

Summary: நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மூளை வறுவல் பிடிக்குமா? ஆனால் அதை சமைக்க தெரியாமல் கடைகளில் வாங்கி சாப்பிடுகிர்களா? இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனெனில் ஆட்டு மூளை வறுவலை வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், ருசியாகவும் செய்யலாம் என்பதைதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.ஆட்டு மூளை சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, சத்துக்கள் அதிகமாக உள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் வீட்டில் செய்து சத்துகள் .

Ingredients:

  • 1 மூளை
  • 1 பெரிய வெங்காயம்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் மிளகு தூள்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மூளையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு, போட்டு பொரிந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும், மூளையை சேர்த்து உடையாமல் பொறுமையாக கிளறி மிளகாய் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
  4. வறுக்கும் போதே தோசை கரண்டியால் வேண்டிய துண்டுகளை போட்டு கொள்ளவும்.
  5. வெந்ததும் இறக்கவும் இப்பொழுது சுவையான மூளை வறுவல் தயார்.