ருசியான நண்டு குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

Summary: சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அசைவத்திலும் பலவகை ரெசிபி உள்ளது கோழி, மீன், இறால், நண்டு இவற்றை வைத்து குழம்பு, வறுவல், போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள்.அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் நாம் இன்றய சமையல் குறிப்பில் கமகமக்கும் நண்டு குழம்பு எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கிலோ நண்டு
  • 2 ஸ்பூன் சோம்பு
  • 5 பல் பூண்டு
  • புளி
  • 3 வெங்காயம்
  • 4 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 டீஸ்பூன் மல்லித்தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. பிறகு சீரகம், சோம்பு, பூண்டு, மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வதங்கிய பிறகு அரைத்த மிளகு, சோம்பு, பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், போட்டு நன்றாக வதக்கவேண்டும்.
  5. பிறகு புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  6. நன்கு கொதித்த பின் சுத்தம் செய்த நண்டை சேர்க்கவும். பிறகு மூடிவிட வேண்டும்.
  7. நண்டு நன்றாக வெந்த பிறகு, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும். பிறகு பரிமாறவும்.