பாரம்பரிய சக்கரை பொங்கல் இப்படி செய்து பாருங்க!

Summary: தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெள்ளம், மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான் இந்த சர்க்கரை பொங்கல்.இந்த பொங்கலை ஒவொருவர் ஒவொரு விதமாக செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பார்ப்பரிய முறை எப்படி சர்க்கரை பொங்கல் செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் பொங்கல் திருநாளன்று தித்திக்கும் சுவையில் இந்த பொங்கலை செய்து கொண்டாடுங்கள்.

Ingredients:

  • 1 கப் பொன்னி அரிசி
  • ½ கப் பாசிப்பருப்பு
  • ½ கப் பால்
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 கப் பொடிச்ச வெல்லம்
  • ¼ ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • ¼ ஸ்பூன் ஜாதிக்காய்
  • பச்சை கற்பூரம்
  • ½ கப் நெய்
  • 10 முந்திரி
  • 2 ஸ்பூன் தேங்காய்
  • 1½ ஸ்பூன் உளர் திராச்சை

Equipemnts:

  • 1 பொங்கல் பானை
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அரிசியையும், பாசிப்பருப்பையும் ஒரு முறை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு அதனை இரண்டாவது தண்ணீரில் ஊறவைக்கவும்.
  2. அடுத்து பொங்கல் பானை அடுப்பில் வைத்து அதில் காய்ச்சாத பால் சேர்த்து அரிசி, பருப்பு ஊறவைத்த தண்ணீர் 1 காப், மற்றும் 5 கப் தண்ணீர் சேர்த்து பொங்கி வரும் வரை விடவும்.
  3. பொங்கி வந்த பிறகு அரிசியையும், பருப்பையும் சேர்த்து அத்துடன் கடலை பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு கொழைய வேகவேண்டும்.
  4. கொழைய வெந்ததும் தீயை குறைத்து அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி, பச்சை கற்பூரம், சேர்த்து கிளறிவிட்டுட்டே இருக்கவேண்டும்.
  5. கிளற கிளற இடையில் நெய் ஊற்றி கிளறிவிடவேண்டும்
  6. அரிசி நன்கு வெந்ததும் பொங்கல் பதத்திற்கு வந்ததும். இறக்கிவைக்கவும்.
  7. பிறகு ஒரு கடாயில் மீதி நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு, துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய் சேர்த்து லைட்டாக வறுக்கவும். முந்திரி பருப்பு நிறம் மாறியதும் திராச்சை சேர்த்து வறுத்து பொங்கலில் ஊற்றி கிளறவும்.
  8. இப்பொழுது சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.